TAMIL

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி: சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் முடிவை எதிர்த்து பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம் அப்பீல்

* இந்தியா- வங்காளதேசம் அணிகள் இடையே வருகிற 14-ந்தேதி இந்தூரில் தொடங்கும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு 7 ஆயிரம் சீசன் டிக்கெட்டுகள் விற்று இருப்பதாகவும் எஞ்சிய 9 ஆயிரம் டிக்கெட்டுகளும் விரைவில் விற்று விடும் என்று எதிர்பார்ப்பதாகவும் மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க தலைவர் அபிலேஷ் கன்டெகர் கூறியுள்ளார். 5 நாளும் பார்க்கக்கூடிய ஒவ்வொரு சீசன் டிக்கெட்டும் ரூ.315-ல் இருந்து ரூ.1,845 வரையிலான விலைகளில் விற்கப்படுகிறது.



* ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி தொடக்க விழா நடத்தும் போது பணம் தான் கோடிக்கணக்கில் விரயமாகிறது, ரசிகர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே கடந்த சீசனை போன்று அடுத்த ஆண்டும் ஐ.பி.எல். தொடக்க விழாவை நடத்துவதில்லை என்று அதன் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

* செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சென்னை மண்டல அளவிலான கபடி போட்டியில் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சென்னை மேரி கிளப்வாலா ஜாதவ் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர். இவர்கள் இறுதி ஆட்டத்தில் 25-8 என்ற புள்ளி கணக்கில் கே.கே.நிர்மலா பள்ளி அணியை தோற்கடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். இதே போல் 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவிலும் இதே அணி வெற்றி கண்டது.

* கொல்கத்தாவில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் இடையே நடக்கும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு (நவ.22-26) வர்ணனையாளராக பணியாற்ற முன்னாள் கேப்டன் டோனிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அழைப்பு விடுத்தது. ஆனால் டோனி இன்னும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருப்பதால் அவர் வர்ணனையாளராக செயல்பட வாய்ப்பில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

* தங்களது இடத்தில் இருந்து வேறு நாட்டுக்கு டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை மாற்றும் சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker