TAMIL

கொரோனாவை விட கொடியவர் சர்வான் – கிறிஸ் கெய்ல் சாடல்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் சிக்சர் மன்னன் 40 வயதான கிறிஸ் கெய்ல், அங்கு நடைபெறும் கரிபீயன் பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஜமைக்கா தலவாஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த சீசனில் அவர் அந்த அணியில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து டேரன் சேமி தலைமையிலான செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணியில் கெய்ல் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் ஜமைக்கா அணியில் இருந்து தன்னை வெளியேற்றியது அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ராம்நரேஷ் சர்வான் தான் என்று கெய்ல் குற்றம் சாட்டியுள்ளார்.

கெய்லுடன் இணைந்து சர்வான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக நிறைய போட்டிகளில் ஆடியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து யு டியூப்பில் வெளியிட்ட வீடியோ பதிவில் கெய்ல் கூறியிருப்பதாவது:-

‘இப்போதைக்கு சர்வான்…. நீ கொரோனா வைரசை விட கொடியவராக இருக்கிறாய். ஜமைக்கா அணியில் இருந்து என்னை கழற்றி விட்டதில் உனது பங்கு மிகப்பெரியது என்பதை அறிவேன்.

அணியின் உரிமையாளருடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி அணியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர் முயற்சிக்கிறார்.

அவருக்கும், மற்ற வீரர்களுக்கும் அணியில் நிறைய பிரச்சினை இருக்கிறது. நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று அவர் சொல்லி இருக்கிறார்.

ஆனாலும் இன்னும் ஏன் எனது போன் அழைப்பை எடுக்கவில்லை. நீ ஒரு பாம்பு. பழிவாங்கி விட்டாய். கரிபீயன் மக்களால் அதிக நேசிக்கப்படும் நபர் நீ கிடையாது.

உன்னிடம் முதிர்ச்சி இல்லை. நம்ப வைத்து முதுகில் குத்தி விட்டாய்.

நீங்கள் எல்லாம் என்னை குறைவாக மதிப்பிட்டு விட்டீர்கள். 1996-ம் ஆண்டு கிரிக்கெட் களத்தில் நுழைந்து இன்னும் விளையாடிக்கொண்டிருக்கும் ஒரே வீரர் நான் தான்.

மற்றவர்கள் ஓய்வு பெற்று விட்டார்கள். அந்த சகாப்தத்தில் கடைசி வீரராக எஞ்சி நிற்கிறேன். இன்னும் களத்தில் வலுவான வீரராக உள்ளேன். தொடர்ந்து வெற்றியாளராக வலம் வருவேன்’.

இவ்வாறு கெய்ல் அதில் கூறியுள்ளார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker