TAMIL

கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: வங்கதேசத்திடம் தங்கத்தை பறிகொடுத்தது இலங்கை

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 23 வயதுக்குட்பட்ட ஆண்கள் இலங்கை கிரிக்கெட் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

நேபாளத்தில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 23 வயதுக்குட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் வங்கதேசம்-இலங்கை அணிகள் மோதின.



நாணய சுழற்சியில் வென்ற வங்கதேசம் பந்து வீச முடிவு செய்தது. அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி , 20 ஓவர்களில் 122 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.

123 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய வங்கதேச அணி, 18.1 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்கள் எடுத்தது.



ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய வங்கதேச அணி தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 23 வயதுக்குட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்துடன் தங்கப்பதக்கம் வென்றது.

தோல்வியடைந்து இரண்டாவது இடத்தை பிடித்த இலங்கை வெள்ளிப் பதக்கம் வென்றது. தொடர் நாயகன் விருது இலங்கை வீரர் காமிண்டு மெண்டிஸிக்கு வழங்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருதை வங்கதேச வீரர் ஹசன் மஹ்மூத் தட்டிச்சென்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker