TAMIL

காற்றில் பறந்து கோல் அடித்து அசத்திய ரொனால்டோ: கவனத்தை ஈர்க்கும் வீடியோ

காற்றில் பறந்துகொண்டே ரொனால்டோ அடித்த கோல் ஒன்று இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கால்பந்து சாம்ப்பியன்ஸ் லீக் போட்டி இத்தாலியில் நடைபெற்று வருகிறது.

இதில் ஜூவன்டசுக்கும், சாம்ட்டோரியாவுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ரொனால்டோ அடித்த ஒரு கோல் தற்போது உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


பறந்து வந்த பந்தை 4 அடிக்கும் மேலாக உந்தி தலையால் தட்டி கோலாக்கியுள்ளார் ரொனால்டோ.

இப்படியான சாகச கோல் எல்லாம் ரொனால்டோவால் மட்டுமே சாத்தியம் என அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

காற்றில் பறக்கும் மனிதன் ரொனால்டோ எனவும் பட்டமளித்து இணையவாசிகள் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த ரொனால்டோ, அது ஒரு நல்ல கோல். எனக்கு ஒரு மாதமாக முட்டியில் வலி உள்ளது.

இப்போது பரவாயில்லை. ஜூவன்டஸ் கிண்ணம் வெல்ல நான் உதவ வேண்டும் என அடக்கமாக தெரிவித்துள்ளார்.


குறித்த போட்டியில் 2-கு 1 என்ற கோல் கணக்கில் ஜூவன்டஸ் வெற்றி வாகை சூடி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker