TAMIL

அவுட் கொடுப்பது போல் வந்து மூக்கை சொறிந்த நடுவர்… பிக்பாஷ் டி20 போட்டியில் நடந்த காமெடி வீடியோ

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியில் நடுவர் அவுட் கொடுப்பது போன்று வந்து, மூக்கை சொறிந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போன்று அவுஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.



இதில் அடிலெய்டி ஸ்டிரைக்கர்ஸ்-மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதிய போட்டி மெல்போர்னில் நடந்தது. இதில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்நிலையில் இபோட்டியில் நடுவர் செய்த செயல் கிரிக்கெட் ரசிகர்களால் சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, போட்டியின் 17-ஆவது ஓவரை, அடிலெய்டு வீரர் ரசித் கான் வீசினார்.

அப்போது துடுப்பாட்ட வீரரான வெப்ஸ்டர் அடித்தாடிய போது பந்தானது பேடில் பட்டது.

இதற்காக ரசித் கான் அவுட் கேட்க, களத்தில் இருந்த நடுவர் கிரேக் டேவிட்சன், முதலில் அவுட் கொடுப்பது போல கையை தூக்கினார்.



ஆனால் சில வினாடிகளில் தனது மனதை மாற்றிக்கொண்டு மூக்கை சொரிந்தார்.

இதனால் விக்கெட் வீழ்ந்த மகிழ்ச்சியில் கொண்டாடிய ரசித்கான் மற்றும் சில வீரர்கள் கோபப்பட்டனர். அதன் பின் நடுவரிடம் அடிலெய்டு வீரர்கள் சிலர் இது குறித்து கேட்டனர். அப்போது நடுவர் பேட் என்பது போல் செய்கை காட்டினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker