CLUB SPORTSFOOTBALLTAMIL

றோயலை வெளியேற்றி இலகுவாக இறுதிக்குள் நுழைந்தது ஞானமுருகன் ….

அரியாலை பயிற்சி உதைபந்தாட்ட மைதானத்தில் 09-09-2019 அன்று மாலை 04 மணிக்கு இரண்டாவது அரை இறுதி போட்டிக்காக ஞானமுருகன் விளையாட்டு கழகத்தை எதிர்த்து ஊரெழு றோயல் விளையாட்டு கழகம் மோதியது. ஞானமுருகன் அணியின் வீரர் ஜெகதீஸ் தனது அதிரடியான ஆட்டதால் 12 வது நிமிடத்தில் தமது அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். முதல் கோல் பதிவாகிய பின் 14 வது நிமிடத்தில் ஞானமுருகனுக்கான இரண்டாவது கோலை பதிவு செய்தார் பபித்திரன். முதல் பாதி 2-0 என்ற கணக்கில் ஞானமுருகன் முன்னிலையில் இருந்தது …





இரண்டாவது பாதியில் றோயல் அணியின் நட்சத்திர வீரர் எடிசன் களம் இறங்கினர். இவர் களம் இறங்கிய பின் ஞானமுருகனின் ஆதிக்கம் சற்று தடுமாறியது. 40ஆவது நிமிடத்தில் றோயல் அணியின் வீரர் கனிஷ்டனுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் ஞான முருகன் அணியின் வீரர் லஸ்டிக்கின் அதிரடியால் 42வது நிமிடத்தில் 3வது கோல் பதிவாகியது. றோயல் அணியினர் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படட வேளையில் அவ்வணியின் நட்சத்திர வீரர் எடிசன் தமது அணிக்காக 48வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார். இதுவே இவ்வணியின் இறுதி கோலும் ஆயிற்று. 54வது நிமிடத்தில் ஞானமுருகன் அணியின் வீரர் சதீபனுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இதன் பின் தமது அணிக்காக இரு அணியினரும் எவ்வித கோல்களும் பெறாத நிலையில் 3-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் நிறைவு பெற்றது…
எதிர்வரும் இறுதி போட்டியில் ஞானமுருகன் அணியினர் எதிர் வளர்மதி அணியினர் பலபரிச்சை நடாத்தவுள்ளனர் …

Related Articles

1 thought on “றோயலை வெளியேற்றி இலகுவாக இறுதிக்குள் நுழைந்தது ஞானமுருகன் ….”

  1. We are a group of volunteers and opening a new scheme in our community. Your site provided us with valuable information to work on. You have done a formidable job and our entire community will be grateful to you.

Leave a Reply

Your email address will not be published.

Close